டுபாயில் பாதாள உலக பேர்வழி மதுஷ் , பாடகர்கள் அமல் பேரேரா மற்றும் அவரது புதல்வர் நதீமால் உட்பட 31 பேர் கைதாகியுள்ள நிலையில் அங்கு சென்று குறித்த பாடகர்களை விடுவிக்க முயற்சிப்பதாக தெரிவிக்கும் சட்டத்தரணி உதுல் தானும் மதுஷும் ஒரே சிறையில் 4 மாதங்கள் ஒன்றாகக் காலம் கழித்ததாகவும் தனக்கு அமல் பெரேராவை விட அதிக காலம் மதுஷைத் தெரியும் எனவும் தகவல் வெளியிட்டுள்ளார்.
எனினும், தான் டுபாய் சென்றது அமல் மற்றும் நதீமாலை விடுவிக்கவே அன்றி, மதுஷ் போன்ற குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்தாக வேண்டும் எனவும் மேலும் தெரிவிக்கிறார்.
ஒன்பது வருடங்களுக்கு முன்பாக கொழும்பு சிறைச்சாலையில் ஜே2 பிரிவில் தாமிருவரும் ஒன்றாக இருந்ததாகவும் இருப்பினும் குற்றவாளிகளைக் காப்பாற்ற தான் டுபாய் செல்லவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். உதுல் பிரேமரத்ன அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தீவிர செயற்பாட்டாளராக இருந்த காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment