அரச வருமானத்தில் 40% பொது சேவைக்கு செலவாகிறது: ரஞ்சித் - sonakar.com

Post Top Ad

Tuesday, 12 February 2019

அரச வருமானத்தில் 40% பொது சேவைக்கு செலவாகிறது: ரஞ்சித்


அரச ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போது இதன் பிறகு அவர்களது செயல்திறனையும் கருத்தில் எடுக்கவுள்ளதாக பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் தெரிவித்தார்.


அண்மையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுவரை காலம் வருடாந்த சேவை அனுபவம் அடிப்படையில் ஒவ்வொரு தரத்திற்கு பதவி உயர்வு செய்யும் முறை இருந்தாலும், செயல்திறனை கருத்தில் கொண்டாலேயே உற்பத்தி திறனை அதிகரிக்க முடியும்.

இலங்கையில் ரூபா 2000 பில்லியன் அரச வருமானத்தில், 40% அரச சேவைக்கு செலவாகிறது. அரச ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வருடாந்தம் ரூபா 400 பில்லியன் செலவாகுவதாகவும் பதினைந்து இலட்சம் அரச ஊழியர்களும், ஆறு இலட்சத்து பதினைந்தாயிரம் ஓய்வூதியம் பெறுபவர்களும் நாட்டில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

-கஹட்டோவிட்ட ரிஹ்மி

No comments:

Post a Comment