சாலியவெவ, நீலபெம்ம பகுதியைச் சேர்ந்த 4 வயதுக் குழந்தையொன்று காணாமல் போயுள்ளதாக கடந்த சில நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் குழந்தையைத் தான் கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் அக்குழந்தையின் தாய்.
வில்பத்து சரணாலயத்தை அண்மதித பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக தேடல் நடவடிக்கைகள் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தையின் சடலத்தைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட குழந்தையை கலா ஓயவில் விட்டெறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு தேடல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment