டுபாயில் மாகந்துரே மதுஷ் கைதானதையடுத்து மேல் மற்றும் தென் மாகாணத்தில் மதுஷின் சகாக்களை வேட்டாயாடும் புதிய நடவடிக்கையொன்றை விசேட அதிரடிப்படையினர் ஆரம்பித்துள்ளனர்.
இதன் பின்னணியில் சுமார் 30 முக்கிய பாதாள உலக பேர்வழிகளை கைது செய்யும் இலக்குடன் புதிய நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களை வழி நடாத்தி வந்த மதுஷ், டுபாயில் போதைப் பொருள் பாவனைக் குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment