நிந்தவூர் அல்மஷ்ஹருக்கு புதிய 3 மாடி கட்டிடம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 12 February 2019

நிந்தவூர் அல்மஷ்ஹருக்கு புதிய 3 மாடி கட்டிடம்



US Pacific Command நிறுவனத்தின் சுமார் ஏழு கோடி ரூபா நிதி உதவியின் கீழ் நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 03 மாடி கட்டிடம் இன்று காலை 9.00 மணியளவில் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் புல்லாவினால் திறந்து வைக்கப்பட்டது.



இதில் நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் அதிபர் ஏ.எல்.நிசாமுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.சி.எம்.பைசால் காசிம், கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்_ஹிஸ்புல்லாஹ் , நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர், நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.லத்தீப், அமெரிக்க மற்றும் மாலைதீவுக்கான தூதரகத்தின் சிவில் இராணுவ பணிப்பாளர் டெர்ரி.ஏ.ஜோன்சன் , அமெரிக்க மற்றும் மாலைதீவுக்கான தூதரகத்தகா அரசியல் பிரிவு தலைவர் அந்தோணி.எப். ரென்சுல்லி , கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பளார் யு.எல்.எம் சாஜித், உள்ளுர் அரசியல் வாதிகள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் இதில் கலந்து சிறப்பித்தனர்.



-ALM Rifass


No comments:

Post a Comment