3 மில்லியன் ரூபா லஞ்சம் பெற்ற முன்னாள் களுத்துறை பிரதேச சபை தவைர் லக்ஷமன் விதான பத்திரனவுக்கு ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது கொழும்பு உயர் நீதிமன்றம்.
ஏலத்தில் விற்பனையான காணியொன்றுக்கு வீதியமைப்பதற்கே இவ்வாறு குறித்த நபர் லஞ்சம் பெற்றிருந்ததோடு ஐந்து வருடங்களுக்கு முன்னர் இவ்விவகாரத்தில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள அதேவேளை தற்போது குறித்த நபர் களுத்துறை பிரதேச சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment