வட கொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை நீக்க மறுத்ததன் பின்னணியில் அமெரிக்க - வட கொரிய தலைவர்களுக்கிடையில் இடம்பெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
முதல் கட்டப் பேச்சுவார்த்தையில் இணங்கியதற்கேற்ப தமது அணு ஆயுத அபிவிருத்தி மையத்தை வட கொரியா தகர்த்திருந்தது. எனினும் அமெரிக்க தரப்பு பொருளாதாரத் தடைகளை நீக்காது வாக்குத் தவறுவதாக வடகொரியா குற்றஞ்சாட்டி வந்தது.
இந்நிலையிலேயே, வியட்நாமில் இடம்பெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதுடன் எவ்வித இணக்கப்பாடுமின்றி முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment