![](https://i.imgur.com/remRqcL.png)
இலங்கை, போதைப்பொருள் கடத்தல் மையமாக மாறியுள்ள நிலையில் தினசரி பெருந்தொகைப் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்றைய தினம் கொல்லுபிட்டியில் வேறு வாகனம் ஒன்றில் ஏற்றி பாதுகாப்பான இடத்துக்கு எடுத்துச் செல்ல முனைந்த நிலையில் சுமார் 2945 மில்லியன் ரூபா பெறுமதியான (294.4 Kg) போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் பாணந்துறை, கெசல்வத்தை பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முஹமத் அஜ்மீர் முஹமத் பஷீர் (43) மற்றும் முஹமத் ரிலா முஹமத் ருஸ்னி (32) ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இலங்கையில் இது வரை கைப்பற்றப்பட்ட பாரிய தொகை போதைப் பொருள் இதுவென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment