ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிப்பதற்கான தகுதியை உறுதிப்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை பெப்ரவரி 26ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மன்றில் ஒப்படைக்கப்பட்டிருந்த ஆவணங்களின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டிருக்கவில்லையெனவும் அது நீதிமன்ற விதிகளுக்குப் புறம்பானது எனவும் ரணில் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் வாதிட்டதையடுத்து மனுதாரர்கள் மேலதிக அவகாசம் கோரியதன் பின்னணியிலேயே விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனம் ஒன்றில் ரணில் விக்கிரமசிங்கவும் முக்கிய பதவி வகிக்கும் நிலையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்க முடியாது என வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment