2018ம் ஆண்டு திருட்டு மின்சாரம் பாவித்த 2522 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறது இலங்கை மின்சார சபை.
விசேட விசாரணைகளின் ஊடாகவே இம்முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய அளவில் 100 வீதம் மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் திருட்டு மின்சாரம் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment