போதைப் பொருள் பாவிக்கும் 24 MPக்களின் பெயர்கள் கையளிப்பு: ரஞ்சன் - sonakar.com

Post Top Ad

Monday, 18 February 2019

போதைப் பொருள் பாவிக்கும் 24 MPக்களின் பெயர்கள் கையளிப்பு: ரஞ்சன்


போதைப் பொருள் பாவனையில் ஈடுபடும் 24 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை தாம் சபாநாயகர் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் ரஞ்சன் ராமநாயக்க.



நாடாளுமன்றிலும் போதைப் பொருள் பாவிப்போர் உள்ளதாக அண்மையில் ரஞ்சன் ராமநாயக்க தகவல் வெளியிட்டதன் பின்னணியில் பெயர்ப்பட்டியலைத் தருமாறு கபீர் ஹாஷிம் கோரியிருந்தார். 

இந்நிலையில், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்களாக 24 பெயரின் பெயர்கள் கொண்ட பட்டியலைத் தாம் ஒப்படைத்துள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment