மஹிந்த அணியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 11 பேர் சுமார் 20 நிமிடங்கள் லிப்டுக்குள் மாட்டிக்கொண்டு தவித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தொழிநுட்ப கோளாறு காரணமாக லிப்ட் பயணம் தடைப்பட்ட நிலையிலேயே 20 நிமிடங்கள் வரை தினேஸ் குணவர்தன, தயாசிறி ஜயசேகர, விமல் வீரவன்ச, டலஸ் அழகப்பெரும, பந்துல குணவர்தன, சந்திம வீரக்கொடி, சி.பி ரத்நாயக்க, ரஞ்சித் அலுவிஹார, சந்திரசிர கஜதீர, காமினி லொகுகே, ரஞ்சித் டி சொய்சா ஆகியோர் லிப்டுக்குள் சிக்கிக் கொண்டுள்ளனர்.
நாடாளுமன்றில் இது குறித்து தினேஸ் குணவர்தன முறையிட்டுள்ள அதேவேளை அங்குள்ள லிப்டுகள் 37 வருடங்கள் பழமையானவை என பதிலளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment