இலங்கை மாணவர்கள் இருவரினால் வடிவமைக்கப்பட்டு இராவணா-1 என பெயரிடப்பட்டுள்ள 1000 கியுபிக் சென்டி மீற்றர் (1 லீற்றர் கொள்ளளவு) அளவான சிறிய விண்கலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண் வெளிக்கு ஏவப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஆர்தர் சி. கிளார்க் மையம்.
தரிந்து தயாராத்ன, துலானி சமிக்க ஆகிய பேராதெனிய பல்கலை மற்றும் ஆர்தர் சி. கிளார்க் கல்வி நிலையத்தைச் சேர்ந்த இருவரினால் 1.1 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்டுள்ள் இச்சிறிய விண்கலம் சுமார் ஒன்றரை முதல் ஐந்து வருட காலம், பூமியிலிருந்து 400 கி.மீற்றர் உயரத்தில் சுற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையைப் பல்வேறு கோணங்களில் படம் பிடிப்பதுடன் பிராந்திய நிலப்பகுதிகளையும் குறித்த விண்கலம் ஆராய்வு நிமித்தம் படம் பிடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிக்னஸ்-1 ஊடாக ஏப்ரலில் விண்ணுக்கு அனுப்பும் வகையில் ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி மையத்திடம் குறித்த விண்கலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் விண்கலம் ஒன்றை அனுப்பியதாக தெரிவித்ததன் பின்னணியில் சர்ச்சை உருவாகியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment