முறியும் நிலையில் 1987 அணு ஆயுத ஒப்பந்தம்: ரஷ்யா பதிலடி! - sonakar.com

Post Top Ad

Saturday, 2 February 2019

முறியும் நிலையில் 1987 அணு ஆயுத ஒப்பந்தம்: ரஷ்யா பதிலடி!


1987 ஆண்டு ரஷ்யா - அமெரிக்கா இடையே உருவான அணு ஆயுத ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதன் மூலம் தற்காலிகமாக விலகிக் கொள்வதாக நேற்றைய தினம் அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில் இன்று ரஷ்யாவும் அவ்வாறே  அறிவித்துள்ளது.



மத்திம தூரம் சென்று தாக்கக் கூடிய அணு ஆயுதங்கள் அபிவிருத்தி செய்வதை கை விடுவதற்கான மேற்படி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நிர்வாகம் அவ்வப்போது ரஷ்யா மீது குற்றஞ்சாட்டி வந்த நிலையில் நேற்றைய தினம் இடை நிறுத்துவதாக அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று ரஷ்யாவும் தமது அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன் திங்கட் கிழமை முதல் புதிய ரக ஆயுதங்களை அபிவிருத்தி செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளது.

வீழ்ச்சி கண்டு வந்த அமெரிக்கா பொருளாதராத்தை மையமாக வைத்து உலக அளவில் பல்வேறு குழப்பங்களை உருவாக்கி அதனூடாக அமெரிக்க டொலரின் மதிப்பை உயர்த்துவதற்கான திட்டத்தை செயற்படுத்தி வரும் அமெரிக்கா, புதுப் புது சர்ச்சைகளை உருவாக்கி வருவதுடன் தற்போது அணு ஆயுத போட்டியை முடுக்கி விட்டு மீண்டும் பனிப்போரை ஆரம்பிப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment