டுபாயில் கைதான பாதாள உலக பேர்வழி மாகந்துரே மதுஷுக்கு இலங்கையில் 23 வங்கிக் கணக்குகளில் சுமார் 1000 கோடி ரூபா பணமிருப்பதாக பொலிஸ் விசாரணைகளை ஆதாரங்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் பல இடங்களில் மதுஷ் சொத்துக்களை வைத்துள்ளதாகவும் முழுமையான விசாரணையின் பின் அவற்றை அரசுடமையாக்க முயற்சிப்பதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டுபாயில் தங்கியிருந்து பாதாள உலக நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த மதுஷ், தனது சகாக்களுடன் போதைப் பொருள் பாவனையின் பின்னணியில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment