1 மணி நேரம் வைத்தியசாலை லிப்டில் சிக்கிய மஹிந்த! - sonakar.com

Post Top Ad

Sunday, 17 February 2019

1 மணி நேரம் வைத்தியசாலை லிப்டில் சிக்கிய மஹிந்த!



அண்மையில் ஆறு பேர் செல்ல வேண்டிய லிப்டுக்குள் மஹிந்த அணியினர் 12 பேர் ஏறிச் சிக்கிக் கொண்ட சம்பவம் நாடாளுமன்றில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், தானும் அண்மையில் ஒரு வைத்தியசாலை லிப்டுக்குள் ஒரு மணி நேரம் மாட்டிக்கொண்டதாக தகவல் வெளியிட்டுள்ளார் மஹிந்த ராஜபக்ச.



இதன்போது தன்னோடு ஜி.எல். பீரிசும் இருந்ததாகவும் வைத்தியசாலை நிர்வாகம் அல்லோலகல்லோலப்பட்டு லிப்டுக்குள் ஒக்சிஜன் விநியோகம் செய்ததாகவும், தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டே தான் வெளியேறியதாகவும் மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், வைத்தியசாலையின் பெயர் மற்றும் இடத்தை குறிப்பிட விரும்பவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment