ஜனநாயக தேசிய முன்னணியெனும் பெயரில் உருவாகவுள்ள தமது கூட்டணியில் சிவில் சமூக அமைப்புகளையும் இணைத்துக்கொள்ள முடிவெடுத்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.
2015 ஆட்சி மாற்றத்திற்காகப் பாடுபட்ட ஜனநாயக சக்திகளையும் இணைத்துக்கொள்வதன் மூலம் தமது கூட்டணியை மேலும் விரிவு படுத்துவதோடு தமது கூட்டணியின் செயற்பாடுகளில் சிவில் அமைப்புகளின் பங்களிப்பையும் உறுதி செய்யவே இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.க தரப்பு தெரிவிக்கிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் ஏலவே இணைந்து செயற்படத் தீர்மானித்திருக்கும் நிலையில் லங்கா சமசமாஜ கட்சி போன்ற சிறிய கட்சிகளையும் உள்வாங்கும் வகையில் கூட்டணிக் கொள்கைகள் விரிவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment