ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இம்முறை சஜித் பிரேமதாசவே களமிறக்கப்படுவார் என பகிரங்கமாக நம்பிக்கை வெளியிட ஆரம்பித்துள்ளனர் ஐக்கிய தேசியக் கட்சியினர்.
இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி, நாடாளுமன்ற உறுப்பினர் ஹேச விதானகே உட்பட பல கட்சி முக்கியஸ்தர்கள் இது குறித்து மக்கள் சந்திப்புகளில் வைத்து தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் ஒக்டோபர் அரசியல் பிரளயத்தின் பின்னர் சஜித்துக்கான ஆதரவு அதிகரித்துள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்கவும் தற்சமயம் சாதகமாக நடந்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றமையும் கரு ஜயசூரியவின் பெயரும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment