ஜனாதிபதி தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சி ஆவலுடன் எதிர்ப்பதாகவும் அமோக வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் அகில விராஜ் காரியவசம்.
மஹாவயில் நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சி நிகழ்வில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், அடுத்த தேர்தல் வரும் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஆளுங்கட்சிகள் பாரிய பின்னடைவை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment