ஒக்டோபர் 26ம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்ட திடீர் அரசியல் பிரளயம் ஒரு வகையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என தெரிவிக்கிறார் அமைச்சர் ஹலீம்.
நேற்றைய தினம் மாவில்மட, கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், 2015ம் ஆண்டு கூட்டாட்சி அமைந்த போதிலும் அமைச்சுப் பதவிகளையும் வளங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பங்கு போட்டதனால் கட்சி ஆதரவாளர்களுக்கு எதையும் ஒழுக்காக செய்யக் கிடைக்கவில்லையெனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைத்திருப்பதால் நிறைய 'சேவைகளை' செய்ய முடியும் என அவர் தெரிவிக்கின்றமையும் இந்த அதிர்ஷ்டம் ஒக்டோபர் அரசியல் பிரளயத்தால் கிடைத்தது எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
-மொஹொமட் ஆஸிக்
-மொஹொமட் ஆஸிக்
No comments:
Post a Comment