துருக்கி அதிபர் அர்துகானை பகிரங்கமாக விமர்சிப்பதனால் அவரது நிர்வாகம் தன்னை ஐக்கிய இராச்சியத்தில் வைத்து கொலை செய்து விடும் என அச்சம் வெளியிட்டு, எதிர்வரும் 17ம் திகதி லண்டனில் இடம்பெறவுள்ள தமது அணியின் கூடைப்பந்தாட்டப் போட்டியில் மறுத்துள்ளார் எனஸ் கன்டர்.
துருக்கியைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க வலைப்பந்தாட்ட நட்சத்திரமான கன்டர், அர்துகானைப் பற்றி பகிரங்கமாக விமர்சித்து வருபவராவார். இந்நிலையிலேயே, அமெரிக்காவிலிருப்பதே தனக்குப் பாதுகாப்பு எனக் கருதுவதாகவும் ஐக்கிய இராச்சியத்துக்கான தமது அணியின் விஜயத்தில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவரது அணியான நியுயோர் க்னிக்ஸ், கன்டர் இல்லாமலேயே திட்டமிட்டபடி வலைப்பந்தாட்டப் போட்டியில் கலந்து கொள்ளும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment