ஐரோப்பிய யூனியனிலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகிக் கொள்வதற்கான காலக்கெடு நெருங்குகின்ற நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக பிரெக்சிட் ஒப்பந்தத்தை சாதகமான முறையில் மேற்கொள்ளத் தவறிய ஐக்கிய இராச்சிய பிரதமர் தெரேசா மேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன் வைக்கப்பட்டுள்ளது.
மேயின் பிரெக்சிட் ஒப்பந்தம் அவரது கட்சியான கன்சர்வடிவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 118 பேர் உட்பட 432 பேரால் எதிர்க்கப்பட்டிருந்த நிலையில் 202 பேரே ஆதரவளித்திருந்த நிலையில் தோல்வியுற்றுள்ளது.
இப்பின்னணியில் பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை முன் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் அதன் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமையும் பெரும்பாலும் தெரேசா மே தோல்வியடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment