ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் கட்சியில் இணைந்த மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்க முடியுமா எனும் கேள்வியும், அத்துடன் அவர் எவ்வாறு எதிர்க்கட்சித் தலைவராக முடியும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேள்வியெழுப்பியிருந்தது.
எனினும், குறித்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லையென தெரிவித்துள்ள சபாநாயகர் மஹிந்த ராஜபக்சவை எதிர்க்கடசித் தலைவராக அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப் போவதாக முன்னர் தெரிவித்திருந்த தமிழ் தேசியக் கூடடமைப்பு தற்போது அந்த எண்ணத்தைக் கைவிட்டுள்ளதாக அறியமுடிகிறது. இப்பின்னணியில் மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவருக்கான அலுவலகத்தை உத்தியோகபூர்வாக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment