ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன என்பதில் எந்த மாற்றமும் இல்லையென வலியுறுத்தியுள்ளார் நிமல் சிறிபால டிசில்வா.
மஹிந்த அணியினர் தொடர்ந்தும் ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரை முன்னிலைப்படுத்துவதற்கே எண்ணிச் செயற்படுகின்ற நிலையில் கடந்த ஒக்டோபரில் மலர்ந்த மைத்ரி - மஹிந்த நட்பு கேள்விக்குறியாகியுள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஏதோ ஒரு கட்டத்தில் நீக்கப்படும் எனும் எதிர்பார்ப்பு நிலவுவதால் பிரதமர் பதவியையே மஹிந்த ராஜபக்ச குறி வைத்துள்ளார். எனினும், அதற்கமைவாக 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதை ஏனைய அரசியல் கட்சிகள் தாமதப்படுத்தி வருவதன் மூலம் மஹிந்தவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகிறது.
மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலையில் நிறைவேற்று அதிகாரமில்லாத பிரதமர் பதவி அவரது எதிர்பார்ப்பில்லையென மஹிந்த விசுவாசிகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment