வரவு-செலவுத் திட்டத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் குழுவொன்றும் ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவிக்கிறார் ராஜித சேனாரத்ன.
அரசுடன் இணைவதில் தடையிருந்தாலும் தொடர்ந்தும் சுதந்திரக் கட்சியில் பலர் ஐக்கிய தேசிய முன்னணியுடன் தொடர்பிலிருப்பதாகவும் தெரிவிக்கின்ற அவர், பட்ஜட் எவ்வித சர்ச்சையும் இன்றி நிறைவேறும் என்கிறார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி பின் வரிசை உறுப்பினர்கள் கட்சித் தலைமை மீது அதிருப்தியுடன் இருப்பதாகவும் பலர் பிரதியமைச்சு பதவிகளை கோரி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment