தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சீருடையணிந்து அடையாள அட்டை தயாரிப்பதற்காக படம் பிடித்ததாக சந்தேகிக்கப்படும் ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
பொலிசாருக்கு கிடைத்த தகவலொன்றின் பின்னணியில் வீடொன்று சோதனையிடப்பட்ட போது அங்கிருந்த நபர் லப்டொப் ஒன்றைக் கைவிட்டு விட்டு தப்பியோடியுள்ளதாகவும் அதில் தேடியபோது சீருடையணிந்தோரின் படங்கள் சிக்கியதாகவும் மேலதிக விசாரணையின் போது கைதான ஒரு நபர், இப்படங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பணம் பெறுவதற்கான திட்டம் இருந்தமை குறித்து விளக்கியுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.
21 இளைஞர்கள் இவ்வாறு சீருடையணிந்த நிலையில் படங்களில் காணப்பட்டுள்ளதாகவும் ஆறு பேர் இதுவரை கைதாகியுள்ள அதேவேளை பிரதான சந்தேக நபர் தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment