ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைக்கவுள்ள தேர்தல் கூட்டணியில் மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் மஹிந்தானந்த அளுத்கமகே.
இவ்வருடம் மாகாண சபை தேர்தல்கள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில் தேர்தலுக்கான வருடமாக அமைந்துள்ளதாகவும் முக்கிய அரசியல் சக்திகள் ஒன்றிணைந்து மக்கள் ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் யட்டிநுவரயில் வைத்து இன்று தெரிவித்துள்ளார் மஹிந்தானந்த.
மஹிந்த ராஜபக்சவை திடீர் பிரதமராக்கிய மைத்ரியின் முடிவை ஜே.வி.பி எதிர்த்திருந்த அதேவேளை ரணிலை ஆதரிக்கவும் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment