ஜே.வி.பி செயலாளர் டில்வின் சில்வாவின் கருத்துக்களைத் திருடி 'தித்த வெனுவென் எத்த' எனும் பெயரில் புத்தகம் வெளியிட்டு அவமானத்தை சந்தித்துள்ள விமல் வீரவன்ச, தான் ஒரு மில்லியன் ரூபாவே அபராதம் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கிறார்.
நீதிமன்ற தீர்ப்பின்படி தான் ஒரு மில்லியன் ரூபாவே செலுத்த வேண்டும் என விளக்கமளித்துள்ள அவர், தீர்ப்பின் பிரதியென தெரிவிக்கும் படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
எனினும், முன்னதாக விமல் வீரவன்ச 10 மில்லியன் ரூபா செலுத்துவார் எனவும் அதனை மக்கள் நலன் நடவடிக்கைகளுக்கு உபயோகிக்கப் போவதாகவும் ஜே.வி.பி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment