புத்தளம், வனாத்தவில்லு பகுதியில் அண்மையில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது முகாம் ஒன்றிலிருந்து என தெரிவிக்கிறது விமல் வீரவன்சவின் தேசிய விடுதலை முன்னணி.
அக்கட்சியின் ஊடக பேச்சாளர் இது பற்றி இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அதேவேளை, ஹனீபா என அறியப்படுபவரருக்குச் சொந்தமான காணியில் பெருமளவு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டமை குறித்த உண்மைகள் விளக்கப்பட வேண்டும் எனவும் இப்பின்னணியில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த அரசியல் வாதியொருவருக்குத் தொடர்பிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
குறித்த அரசியல் வாதி ஊடாக தற்போது தலைமறைவாக இருக்கும் மாவனல்லை இளைஞர்களையும் சரணடைய வைப்பதற்கான வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்ததாகவும் எனினும் இதுவரை சரணடையவில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், சிரியாவில் ஐ.எஸ் அமைப்புடன் இணைந்த இலங்கையர் முதல் இன்றைய சம்பவங்கள் வரை தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, மேல் மாகாணத்தைச் சேர்ந்த குறித்த அரசியல்வாதியின் பெயரை பொலிசார் வெளியிட வேண்டும் எனவும் தலைமறைவாக உள்ளவர்களை அவ்வரசியல்வாதியே காப்பாற்றி வருவதாகவும் அவர் மேலும் குற்றஞ்சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
முழு உரை அடங்கிய காணொளி:
No comments:
Post a Comment