ICC T20: நேரடித் தேர்வை தவற விட்டுள்ள இலங்கை! - sonakar.com

Post Top Ad

Tuesday, 1 January 2019

ICC T20: நேரடித் தேர்வை தவற விட்டுள்ள இலங்கை!


2020  உலகக் கோப்பைக்கான போட்டிகளில் குழு நிலையில் பங்கேற்று முன்னேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது இலங்கை கிரிக்கட் அணி.



உலக தரப்படுத்தலில் முதல் எட்டு இடங்களில் உள்ள அணிகள் சுப்பர் 12 நிலைக்கு தேர்வாகும். எனினும், இலங்கையும் பங்களதேஷும் அதற்கான தகுதியைப் பெறத்தவறியுள்ள அதேவேளை ஆப்கனிஸ்தான் முதல் எட்டு அணிகளுக்குள் உள்ளடங்குகிறது.

இந்நிலையில், ஏனைய 8 அணிகளுக்குள் இடம்பெறும் போட்டிகள் ஊடாக தெரிவாகியே சுப்பர் இலங்கை அதற்கான தகுதியைப் பெற வேண்டியுள்ளமையும் இலங்கை கிரிக்கட் நிர்வாகம் ஊழலில் சிக்கி தேசிய அணியின் விளையாட்டுத் திறமையும் மழுங்கடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment