கடந்த மூன்றரை வருட கூட்டாட்சியில் இடம்பெற்ற ஊழல் நடவடிக்கைகளை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு ஒரு ஆணைக்குழு நடைமுறைக்கு வந்தால் தானும் தகவல் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் பிரதியமைச்சர் நளின் பண்டார.
கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், தன்னிடம் முக்கிய ஆதாரங்கள் சில இருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.
மத்திய வங்கி ஊழலை விட மோசமான ஊழல்கள் இடம்பெற்றிருப்பதாக நவம்பரில் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment