லசந்த கொலை; கோத்தா தான் காரணம்: முன்னாள் DIG - sonakar.com

Post Top Ad

Friday, 18 January 2019

லசந்த கொலை; கோத்தா தான் காரணம்: முன்னாள் DIG



லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு கோத்தபாயவே பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட டி.ஐ.ஜி பிரசன்ன நானாயக்கார தெரிவித்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வெள்ளை வேன் கடத்தல்கள் மற்றும் கொலைகளில் கோத்தா தொடர்புபட்டிருப்பதாக மேர்வின் சில்வா அடிக்கடி தெரிவித்து வருகின்ற நிலையில் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரி சுகதபாலவிடம் நானாயக்கார தெரிவித்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக கோத்தா தயாராகி வரும் அதேவேளை எதிர்வரும் வாரம் முதல் டி.ஏ ராஜபக்ச நினைவக நிதி மோசடி தொடர்பிலான வழக்கு தினசரி விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment