மைத்ரி கொலைத் திட்ட விவகாரத்தின் பின்னணியில் இன்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சென்று வாக்குமூலமளித்துள்ளார் விமல் வீரவன்சவின் சகா முசம்மில்.
கைது செய்யப்பட்டுள்ள இந்திய பிரஜை, தன்னையும் சந்தித்ததாக தெரிவித்ததன் பின்னணியிலேயே குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தனது விளக்கத்தைக் கேட்டதாகவும் இனியும் தன்னை சி.ஐ.டியினர் அழைக்கும் தேவையெதுவும் இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த முசம்மில், அலுவலகத்துக்கு யார் வந்தாலும் தம்மை சந்திப்பதுண்டு எனவும் தனக்கும் கொலைத் திட்டத்துக்கும் எவ்வித தொடர்புமில்லையெனவும் தெரிவித்ததோடு குறித்த நபர் தன்னோடு ஐந்தே நிமிடங்களே பேசியதாகவும் தெரிவிப்பதோடு கொலைத் திட்ட விவகாரத்தில் இனியும் தம்மை தொடர்பு படுத்த முடியாது எனவும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment