மைத்ரி கொலைத் திட்ட விவகாரம் தொடர்பில் விமல் வீரவன்ச இன்றைய தினம் குற்றப்புலனாய்வு பிரிவினரி விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலமளித்துள்ள நிலையில் அவரின் ஆஸ்தான சீடர் முசம்மிலையும் நாளைய தினம் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விவகாரத்தில் தொடர்புபட்டதாகக் கருதப்படும் இந்திய பிரஜை விமல் வீரவன்சவின் வீட்டுக்குச் சென்று வந்துள்ள அதேவேளை நாமல் ராஜபக்சவையும் சந்திக்கச் சென்ற பின்னணியில் நாமலுக்கும் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரஜை பற்றி தகவல் வெளியாகியதும் கையுமாக குறித்த நபர் றோ உளவாளியென விமல் வீரவன்ச தெரிவித்திருந்தமையும் மனநலன் பாதிக்கப்பட்டவர் என கொழும்பு இந்திய தூதரகம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment