கடந்த வருடம் நவம்பர் மாதம் 16ம் திகதி நாடாளுமன்றில் கலகம் விளைவித்த மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரு மாத காலம் தடை செய்வதற்கு ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இருவரும் உள்ளடக்கம் என தற்சமயம் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், வரவு-செலவுத் திட்டம் மற்றும் முக்கிய சில மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ளும் நிமித்தம் அரசு இவ்வாறு எதிர்க்கட்சியின் குரலை அடக்கப் பார்ப்பதாக மஹிந்த அணியினர் தெரிவிக்கின்றனர். முறைப்படி விசாரணை நடாத்துவதாக இருந்தால் ரணில் விக்கிரமசிங்கவையே முதலில் விசாரிக்க வேண்டும் என ரஞ்சித் சொய்சா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment