ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் துறை சார்ந்த நிறுவன தலைவர்கள் மாநாட்டில் முதன்மை உரையை நிகழ்த்துவதற்காக சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யாகூப் அம்மையாருக்குமிடையிலான சந்திப்பு இன்று (24) முற்பகல் இடம்பெற்றது.
சிங்கப்பூரின் இஸ்தானா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி அவர்களைஇ சிங்கப்பூர் ஜனாதிபதி சிநேகபூர்மாக வரவேற்றார்இ அதனைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment