2012- 2015 வரை பயங்கரவாதி ஞானசாரவின் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்துப் பதிவான வழக்குகளில் முஸ்லிம்கள் தரப்பில் ஆஜரான முக்கிய சட்டத்தரணியும் தற்போதைய மத்திய மாகாண ஆளுனருமான மைத்ரி குணரத்னவை நாடி, அவரூடாக ஜனாதிபதியின் மன்னிப்பைக் கோரும் கடிதம் ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஞானசாரவின் சகா அருண் காந்த்.
அகில இலங்கை இந்து சம்மேளனம் என பெயரிடப்பட்ட அமைப்பொன்றுக்கு உரிமை கொண்டாடி வரும் குறித்த நபர், ஞானசாரவின் தயவில் வெளியுலகுக்கு அறிமுகமான நபராவார். இந்நிலையில், சுமார் 400 இந்துக் கோயில்களிலிருந்து கடிதங்களைப் பெற்று அதனை மத்திய மாகாண ஆளுனரிடம் ஒப்படைக்கப் போவதாகவும் அவர் ஊடாக ஜனாதிபதிக்கு அக்கடிதங்களை அனுப்பி வைக்கப் போவதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
ஏலவே, ஞானசாரவை விடுவிக்க ஜனாதிபதியுடன் அவர் சார்ந்த பிக்குகள் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ள நிலையில் அருண் காந்த் தனது சார்பிலும் சலசலப்பை உருவாக்க முனைகின்றமையும் மலை நாடுகளில் பெருமளவில் சிறு வழிபாட்டுத்தளங்கள் இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment