வட பெல்ஜியம், ப்ளன்டர்ஸ் பகுதியில் ஹலால் மற்றும் கொஷர் (யூத) முறையில் விலங்குகள் அறுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம், தென் பகுதி நகரமான வலோனியாவில் இதே போன்று தடை விதிக்கப்பட்டிருந்த அதேவேளை கொல்லப்படுவதற்கு முன் மிருகங்களை இலத்திரனியல் முறையில் அதிர்வுண்டாக்கி மயக்கமடையச் செய்ய வேண்டும் எனவும் அதன் பின்னரே அறுக்க வேண்டும் எனவும் புதிய சட்டம் தெரிவிக்கிறது.
ஹலால் மற்றும் கொஷர் முறைகளுக்கு எதிரான இந்நடவடிக்கை சமய சுதந்திரத்துக்கு எதிரானது என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் மிருகங்களை நேரடியாக உயிரோடு அறுப்பதை விட இது மனிதத்தனமானது என அங்குள்ள மனித நேய அமைப்புகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment