மஹிந்த ராஜபக்சவையே சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளதாக இன்று சபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதிசபாநாயகர் ஆனந்த குமாரசிறியே இவ்வறிவிப்பை மேற்கொண்டுள்ள அதேவேளை மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் என அண்மையில் அக்கட்சி சபாநாயகருக்கு அறிவித்திருநதது.
இப்பின்னணியில், மஹிந்தவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பான சந்தேகம் முடிவுக்கு வந்துள்ள போதிலும், தான் ஸ்ரீலசுகட்சியை விட்டு விலகி பெரமுனவில் இணைந்து விட்டதாக மஹிந்த ராஜபக்ச முன்னர் அறிவித்திருந்தமையும் பின்னர் மறுதலித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment