சமையல் எரிவாயுவையடுத்து பால்மாவின் விலையையும் அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பக்கற் ஒன்றின் விலையை 100 ரூபாவால் அதிகரிக்க அனுமதியளிக்காது விடின் ஏலவே இறக்குமதி செய்யப்பட்டு துறைமுகத்தில் உள்ள கையிருப்பை வெளியில் எடுக்கப் போவதில்லையெனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இலங்கை நாணய பெறுமதியின் வீழ்ச்சி மற்றும் வரிகள் உட்பட்ட பிரச்சினைகளால் மாதாந்த 3 - 4 கோடி ரூபா இழப்பிலேயே பால்மா இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுவதுடன் ஆகக்குறைந்தது VAT நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment