தனது தந்தையின் கொலையாளி யார் என கோத்தாவுக்கு தெரியுமாக இருந்தால் அதனை பொலிசுக்குச் சொல்லாமல் கோத்தபாய ராஜபக்ச மறைப்பதேன் என கேள்வியெழுப்பியுள்ளார் லசந்த விக்ரமதுங்கவின் புதல்வி.
லசந்தவின் மகளுக்குத் தன் தந்தையைக் கொன்றது யார் எனத் தெரிய வேண்டுமாக இருந்தால், அவர் தன்னை வந்து நேரில் சந்திக்கட்டும் என அண்மையில் கோத்தபாய தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே, அதற்கு பதிலளித்துள் அவர், கோத்தா இக்கொலையைச் செய்யவில்லையாயின், அதுவும் கொலையாளி யார் எனும் உண்மை தெரியுமாயின் அதனை பொலிசில் சொல்லாமல் மறைப்பதேன்? என வினவியுள்ளார்.
அதேவேளை, தன் தந்தையைக் கொலை செய்தவர்களுக்கு ராஜதந்திர பதவிகளைக் கொடுத்து அழகு பார்த்ததும் கோத்தாதான் எனவும் அவரது உத்தரவின் பேரிலேயே கொலை நடந்தது எனவும் லசந்தவின் புதல்வி ஏலவே குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment