மைத்ரி கொலைத்திட்ட விவகாரங்கள் தொடர்பில் பொலிஸ் உளவாளியும் சர்ச்சைப் பேர்வழியுமான நாமல் குமார ஊடகங்களுக்கு கருத்து வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் வேண்டுகோளையடுத்தே கோட்டை நீதிமன்றம் நேற்றைய தினம் இவ்வுத்தரவை விடுத்துள்ளது.
இதேவேளை, நாமல் குமார ஊடகங்களுக்கு வழங்கியதாகக் கூறப்படும் விபரங்களை நீதிமன்றுக்கு வழங்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளமையும் நாமல் குமார இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் எனும் தகவல் வெளியாகியுள்ளதுடன் இனவாத அமைப்புகளுடனான தொடர்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment