பிரான்ஸ் தலைநகர் பரிஸ் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய வெடிப்புடனான தீ விபத்தில் பலர் காயமுற்றுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேக்கரி ஒன்றில் வாயுக் கசிவு ஏற்பட்டதே விபத்துக்குக் காரணம் என உள்ளூர் வானொலியொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, அவசர சேவைகளுக்கு இடம் தரும் வகையில் மக்களை அப்பகுதிக்கு செல்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னணியில் அப்பகுதியில் தரித்து நின்ற மற்றும் பயணித்த பல வாகனங்கள் சேதங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தின் பின்னணியில் அப்பகுதியில் தரித்து நின்ற மற்றும் பயணித்த பல வாகனங்கள் சேதங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment