ஊடகவியலாளர்களை கொலை செய்து நாட்டை அச்சுறுத்தலுக்குள்ளாக்கியவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார் குமார வெல்கம.
பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச நியமிக்கப்படுவார் எனும் தகவல் வெளியிடப்பட்டதிலிருந்து அதனை வெல்கம தீவிரமாக எதிர்த்து வருகிறார். இந்நிலையிலேயே நேற்றைய தினம் செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் வெல்கம இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோத்தபாய ராஜபக்ச தான் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment