கடந்த ஒக்டோபரில் மைத்ரி - மஹிந்த நட்புறவு உருவானதன் பின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த அதிருப்தியாளர்கள் கட்சித் தலைமை மீது அதிருப்தி வெளியிட்டு வருவதுடன் அரசுடன் இணைந்து கொள்ள அனுமதி கோரி வருகின்றனர்.
இந்நிலையில், சந்திரிக்கா தலைமையில் பல கட்ட சந்திப்புகள் இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருவதுடன் தற்போது அவர் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க தூபமிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறான சூழ்நிலையில் பெரும்பாலும் துமிந்த திசாநாயக்க சந்திரிக்கா அணியில் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment