சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி சனிக்கிழமையும் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளது.
குறித்த இரு தினங்களிலும் முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரையும் சாய்ந்தமருது பொலிவேரியன் நகரில் அமைந்துள்ள கல்லூரியின் நிர்வாக காரியாலயத்தில் இந்நேர்முகப் பரீட்சை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இம்முறை ஜீ.சி.ஈ.சாதாரண தரப் பரீட்சை எழுதிய அல்-குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்த மாணவிகள் உரிய ஆவணங்களுடன் நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்க முடியும் என கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.
இக்கல்லூரியில் அல்-ஆலிம் மற்றும் ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைகளுக்கு மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர். இங்கு பயிலும் மாணவிகள் மூன்றாம் வருடத்தில் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதுடன் நான்காம் வருடத்தில் அல்ஆலிம் பரீட்சைக்கு தோற்றி மௌலவியாக்களாக பட்டம் பெற்று வெளியேறுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்..
கடந்த காலங்களில் இக்கல்லூரியில் இருந்து ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய பெரும்பாலான மாணவிகள் எல்லா பாடங்களிலும் சித்தியடைந்து, பல்கலைக்கழக அனுமதி பெற்று, உயர்கல்வி கற்று வருகின்றனர். அத்துடன் அரசாங்க அல்ஆலிம் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவிகளும் சித்தியடைந்திருப்பதுடன் இதுவரை 09 மாணவிகள் மௌலவியா பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் தனியார் கட்டிடம் ஒன்றில் ஆரம்பிக்கப்பட்டு, இயங்கி வந்த இக்கல்லூரி, பொலிவேரியன் நகரில் அனைத்து வசதிகளுடனும் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத் தொகுதியில் தற்போது இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
-A.S. Moulana
No comments:
Post a Comment