ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலை முஸ்லிம் மஜ்லிஸின் வருடாந்த இரத்த தான முகாம் - sonakar.com

Post Top Ad

Sunday, 13 January 2019

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலை முஸ்லிம் மஜ்லிஸின் வருடாந்த இரத்த தான முகாம்


ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கழைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் இரத்த தான முகாம் இம்முறையும் கடந்த ஜனவரி 9ம் திகதி புதன் கிழமை நடைபெற்றது.


பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் கேட்போர் கூடத்தில் காலை 8.30 தொடக்கம் மாலை 3.00 மணி வரையில் நடைபெற்ற இந்நிகழ்வில்100 பேர் வரையில் இரத்த தானம் செய்தமை குறிப்பிடத்தக்கது.


மேலும் இதன் ஆரம்ப நிகழ்வில் அனுசரனை வழங்கிய இலங்கை நேர்மை மற்றும் நிலையான அபிவிருத்திக்கான அமைப்பின் (SLAISD) பனிப்பாளர் அபூ சைட் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருக்கான நினைவுச்சின்னம் முஸ்லிம் மஜ்லிசின் தலைவர் நிசாமினால் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் இங்கு வருகை தந்த நாரஹேன்பிடிய தேசிய இரத்த வங்கியின் உறுப்பினர்களுக்கான நினைவுச்சின்னம் சிரேஷ்ட விரிவுரையாளர் டொக்டர் அஜ்வதினால் வழங்கி வைக்கப்பட்டது.

-Nafas Nawfar

No comments:

Post a Comment