கடந்த வருடம் நவம்பர் 16ம் திகதி மஹிந்த அணியினர் நாடாளுமன்றில் உருவாக்கிய கலவர சூழ்நிலையில் சபாநாயகர் ஆசனத்தைக் கைப்பற்றி அதில் அமர்ந்திருந்தார் அருந்திக்க பெர்னான்டோ.
சபாநாயகரை சபைக்குள் வர அனுமதிக்காது மஹிந்த அணியினர் மேற்கொண்ட பிரளயத்தின் போதே இந்நிகழ்வு இடம்பெற்றிருந்ததோடு நீண்ட நேரமாக அங்கு அமர்ந்திருந்த அருந்திக்க எழுந்திருக்கவும் மறுத்திருந்தார்.
இந்நிலையில், தற்போது விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் இன்று தான் அவ்வாறு செய்தமை தவறு என நாடாளுமன்றில் வைத்து மன்னிப்புக் கோரியுள்ளார். அன்றைய சம்பவங்கள் பற்றி விசாரணை நடந்து வருவதுடன் இடைக்கால அறிக்கையின் பிரகாரம் சேதங்களை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்தே பெற்றுக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment