நாடளாவிய ரீதியில் பெருந்தொகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுகின்ற போதிலும் அவற்றின் பெரும்பாலானவை மீண்டும் கள்ளச் சந்தையை சென்றடைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டாட்சி அரசின் ஆரம்ப கட்டத்தில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் பகிரங்கமாக அழிக்கப்பட்டிருந்ததுடன் யானைத் தந்த கடத்தலும் தடை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
எனினும், அண்மைக்காலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்ற அதேவேளை சந்தையில் போதைப்பொருள் விநியோகம் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment