தாய்வான் தனி நாடன்றி, சீனாவின் ஒரு பிராந்தியம் என தொடர்ச்சியாக சீனா கூறி வரும் நிலையில் அமைதியான முறையில் தாய்வானை சீனாவுடன் மீளிணைக்க முடியாது போனால், ஆயுத பலத்தைக் கொண்டாவது அதை சீனா நிறைவேற்றும் என தெரிவித்துள்ளார் சீன ஜனாதிபதி ஜின் பிங்.
தாய்வானில் சுயாட்சி இடம்பெற்று வருகின்ற போதிலும் சீனாவிடமிருந்து 'சுதந்திரம்' பெற்று விட்டதாக அந்நாடு இதுவரை அறிவிக்கவில்லை.
இந்நிலையில், தாய்வான் சீனாவின் பிராந்தியம் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஏதோ ஒரு கட்டத்தில் ஆயுத பலம் கொண்டாவது மீளிணைப்பு இடம்பெறும் எனவும், அமைதியாக நடந்தால் ஒரு நாடு இரு ஆட்சியெனும் அடிப்படையில் முடித்துக் கொள்ளலாம் எனவும் சீன ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
தம்மை சீன குடியரசு என அடையாளப்படுத்தும் தாய்வான், ஐக்கிய நாடுகள் சபையிலும் அங்கத்துவம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment